இந்த வார எவிக்சன் நபர்: கதறி அழும் ஐஸ்வர்யா-யாஷிகா

  • IndiaGlitz, [Sunday,August 05 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்வாதிகார டாஸ்க் பஞ்சாயத்து நேற்று கமல் முன்னிலையில் நடந்தது. வழக்கம் போல் கமல் தன்னுடைய அனுபவம் மற்றும் தற்புகழ்ச்சியுடன் கோட்டை கழட்டி கீழே போட்டு கொஞ்சம் சீனும் போட்டார். பாலாஜி நடு இரவில் சாப்பிட்டதை குறும்படம் போட்டு வெளிச்சம் காட்டிய கமல், கடைசி வரை ஐஸ்வர்யாவுக்கு ஒரு குறும்படம் போட்டு அவரது முகத்திரையை முழுதாக கிழிக்கவில்லை என்பதே நெட்டிசன்களின் ஆதங்கமாக இருந்தது. கடந்த வார டாஸ்க்கில் கொடிக்காக பல வன்முறை நடந்த நிலையில் சர்வாதிகார டாஸ்க்கில் ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதை பெரிய குற்றமாக கமல் கூறியதும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் உள்ள பொன்னம்பலம், மும்தாஜ், ஷாரிக், யாஷிகா, ரித்விகா, பாலாஜி ஆகியோர்களில் நேற்று ரித்விகா காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கமல், எவிக்சன் யார் என்பதை அறிவித்ததும் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் அதிர்ச்சியில் கதறி அழுகின்றனர். இருவருக்கும் நெருக்கமான ஒருவர்தான் இன்று வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை பார்த்த சிலர், இந்த வாரம் ஷாரிக் தான் வெளியேறியுள்ளதாக டுவீட் செய்துள்ளனர். ஷாரிக் வெளியேறினால் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் வருத்தப்படுவது சரிதான். இருப்பினும் புரமோ வீடியோவிற்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் பல நேரங்களில் இருந்துள்ளதால் இன்று இரவு வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்த பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் தற்போது நடிகைகள் ரிலிஸ் எடுத்து ஆக்சன் காட்சிகளில் நடிப்பது அதிகரித்து வருகிறது. அழகு பதுமையாகவும், பாடல் காட்சிகளுக்கு நடனமாடும் காட்சிகளில் மட்டும் நடித்து வந்த நடிகைகள்

நெல்லை அருவியில் குதூகலமாக குளித்த தல: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் தோனி, நேற்று மதுரை-கோவை இடையே நெல்லை மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.

ரஜினி படத்தை இரண்டு முறை மிஸ் செய்த விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

, audio and Trailer From today. #EcharikkaiFromAug24

சுசீந்திரன் இயக்கும் 'ஜீனியஸ்' பட இசையமைப்பாளர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'ஜீனியஸ்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்?