இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? மணமகள் யார்?

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

அஜித் நடித்த 'கிரீடம், விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய். இவர் நடிகை அமலாபாலை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் விரும்பியதாகவும், இதுவரை மறுமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த விஜய் தற்போது சம்மதம் தெரிவித்திருப்பதால் அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஏற்ற மணமகள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய்யின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று விஜய் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

விஜய் தற்போது பிரபுதேவா நடித்து வரும் 'லக்ஷ்மி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கதறிகதறி அழும் டேனியல் ரித்விகா, நித்யா: காரணம் என்ன?

தினமும் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகளே உள்ள புரமோ வீடியோக்கள் நன்றாக இருப்பதாக் பிக்பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய்க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

கடந்த சில வருடங்களாக விஜய் படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்ததாக சரித்திரம் இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருந்தாலும்

வித்தியாசமான கேரக்டரில் முதன்முதலில் ரிஸ்க் எடுக்கும் வரலட்சுமி

தமிழ் திரையுலகில் பார்வை திறனற்ற கேரக்டரில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நட்சத்திரங்கள் மிகவும் அரிது. குறிப்பாக நடிகைகள் இந்த கேரக்டரில் நடிக்க தயங்குவதுண்டு.

யோகிபாபுவை அடுத்த நயன்தாராவுக்கு ஜோடியாகும் கலையரசன்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது கேரக்டர் வலுவாக இருந்தால் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ, இயக்குனர் புதுமுகமாக இருந்தாலும் கொஞ்சம் கூட தயங்காமல் நடிக்கும் வழக்கத்தை உடையவர்.

தளபதி விஜய்யிடம் பாராட்டு பெற்ற வளரும் நடிகை

தளபதி விஜய்யிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்று திறமையான நட்சத்திரங்களை அவர் மனம் திறந்து பாராட்டுவதில் முதன்மையானவர். அந்த வகையில் சமீபத்தில் விஜய்யிடம் பாராட்டு பெற்றவர்