சசிகலா வீட்டில் திடீரென குவிந்த அதிமுக மூத்த நிர்வாகிகள். நடப்பது என்ன?
- IndiaGlitz, [Saturday,December 10 2016]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதல்வர் பணியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா வகித்த வந்த இன்னொரு சக்திவாய்ந்த பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்ததை அடுத்து இன்று அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் சசிகலா தங்கியுள்ள போயஸ் கார்டனுக்கு விரைந்தனர். செங்கோட்டையன், வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி, உள்பட பலர் சற்று முன் போயஸ் கார்டன் சென்று சசிகலாதான் அடுத்த பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியபோது, 'அதிமுக பொதுச்செயலாளராக சின்னம்மாதான் வரவேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். எங்களுடைய அன்புக்கட்டளையை ஏற்று சின்னம்மா கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள அதிமுகவை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.