விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினாரா சமந்தா? பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கள்ள ’காத்து வாக்கில ரெண்டு காதல்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் அனிருத் இசையமைக்கும் இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க இருந்த நடிகை சமந்தா திடீரென இந்த படத்தில் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. சமந்தா தற்போது கர்ப்பமாகியுள்ளதாகவும், இதனை அடுத்து அவர் ’காத்துல வாக்கில ரெண்டு காதல்’ உள்பட எந்த படத்திலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் சமந்தா கர்ப்பமான தகவலை அவரோ அல்லது அவரது கணவர் நாக சைதன்யாவோ இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி கசிந்ததில் இருந்து சமந்தாவின் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

More News

ஜிவி பிரகாஷூக்காக தனுஷ் பாடிய பாடல்!

நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலவித அவதாரங்களில் ஜொலித்து வருபவர் என்பது தெரிந்ததே.

'சூரரை போற்று' அடுத்த அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாசில்தார் மனைவியுடன் கள்ளக்காதல்: தடையாக இருந்த தாய் கொலை

ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவரின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த ஒருவர், கள்ளக்காதலிக்காக தன்னுடைய தாயாரை கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது

கேரளாவைக் கலக்கும் தமிழ் கிராமிய பாடலைக் கேட்டீர்களா..!

பிரித்விராஜும், பிஜு மேனனும் நேரில் சென்று பார்த்தனர்.  இருவரையு&

ரஜினிக்கு உதவ தயார், ஆனால் ஒரு கண்டிஷன்: சுப்பிரமணியசாமி நிபந்தனை 

ரஜினிக்கு அரசியல் ஆலோசனை வழங்கவும் அவருக்கு உதவி செய்யவும் தான் தயார் என்றும் ஆனால் அதற்கு ரஜினிகாந்த் ஒரு நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும்