close
Choose your channels

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்திற்கு சமந்தா சென்றாரா?

Thursday, June 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் சமந்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டு விட்டது என்பதும் சமூக வலைதளங்களில் இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் நெருங்கிய தோழியான நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை சமந்தாவுக்கு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடிகை சமந்தா காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ’குஷி’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவரால் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் செல்போன் மூலம் அவர் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos