தள்ளிப்போகிறதா எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்.?

  • IndiaGlitz, [Monday,December 27 2021]

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ வரும் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருகிறது என்பதும், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஒருசில நாடுகளில் ஒமிக்ரான் மட்டுமின்றி கொரோனா வைரஸும் மிக அதிகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதிக்குள் ஒமிக்ரான் வைரசால் திரையரங்குகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது தள்ளிப் போகுமா? என்ற சந்தேகத்தை ஒரு சிலர் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வந்தாலும் திரையரங்குகளை மூட எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போதைய நிலவரப்படி ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹீரோவாகும் இன்னொரு பிரபல இசையமைப்பாளர்?

விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்பட ஒரு சில இசையமைப்பாளர்கள் திரையுலகில் வெற்றிகரமான ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் ரொம்ப கூச்சப்பட்டேன் இயக்குனரே: சூர்யா

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு

கோவா பீச்சில் கிளாமர் உடையில் சமந்தா: வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!

கோவா பீச்சில் நீச்சல் உடையில் வேற லெவலில் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

எனக்கு பிக்பாஸ் டைட்டில் வேண்டாம்: தாமரை சொன்னது உண்மைதானா?

எனக்கு பிக் பாஸ் டைட்டில் வேண்டாம் என தாமரை கூறினாலும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் தொடர்ந்து அவர் போராடி வருவது அவர் கூறியது உண்மைதானா என யோசிக்க வைக்கின்றது.

நடிகை சன்னிலியோனுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்… 3 நாள் கெடு விதித்த சம்பவம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம்வரும் நடிகை