தள்ளிப்போகிறதா எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்.?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ வரும் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருகிறது என்பதும், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஒருசில நாடுகளில் ஒமிக்ரான் மட்டுமின்றி கொரோனா வைரஸும் மிக அதிகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதிக்குள் ஒமிக்ரான் வைரசால் திரையரங்குகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது தள்ளிப் போகுமா? என்ற சந்தேகத்தை ஒரு சிலர் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வந்தாலும் திரையரங்குகளை மூட எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போதைய நிலவரப்படி ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout