உண்மையில் ஐஸ்வர்யாவை மக்கள் தான் காப்பாற்றினார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலில் இருந்த ஐஸ்வர்யா, மும்தாஜ், செண்ட்ராயன், விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த முடிவு குறித்து கமல் கூறுகையில் மக்களை குறை கூறினார்.
இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர் பார்ப்பதாகவும் ஆனால் டுவிட்டரில் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஓட்டு போடவில்லை என்றும் கமல் கூறினார். இதிலிருந்து கமல் ஒரு அரசியல்வாதிக்கு தேவையான அனைத்து தகுதியையும் பெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது. மேலும் கடந்த சீசனில் ஓவியாவுக்கு மட்டுமே ஒன்றரை கோடி ஓட்டு விழுந்ததாகவும், ஆனால் தற்போது மொத்தமே ஒன்றரை கோடி ஓட்டு கூட விழவில்லை என்றும் கூறினார். மேலும் கோடிக்கணக்கானோர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஓட்டு போட்டால்தான் தகுதியானவர்கள் வெற்றி பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
கமல் கூறியது ஓரளவு உண்மை. ஓட்டு குறைவாக விழுந்தது என்று அவர் கூறியது மட்டும் உண்மைதான். ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சீசனைவிட குறைவுதான். எனவேதான் ஓட்டுக்கள் குறைந்ததே தவிர, கமல் கூறியதை போல ஓட்டு போடாமல் யாரும் இல்லை
மேலும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார் என்பதை கூட மன வருத்தத்தோடு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நேற்று கமல் ஒரு கிராஃபை காண்பித்து ஐஸ்வர்யாவுக்குத்தான் அதிக ஓட்டுக்கள் விழுந்ததாக கூறியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் புலம்புகின்றனர். ஒரு சிறிய வித்தியாசத்தில் ஐஸ்வர்யா இந்த எவிக்சனில் இருந்து தப்பித்துவிட்டார் என்று கூறினால் கூட அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் மக்கள் விரோதத்தற்கு எதிராக மிக அதிக வாக்குகளை ஐஸ்வர்யா பெற்றார் என்ற ஒரு முடிவை அறிவித்ததை ஏற்று கொள்ள யாரும் தயாராக இல்லை என்பதே அனைவரும் கருத்தாக உள்ளது.
இதிலிருந்தே ஐஸ்வர்யாவை பிக்பாஸ் இறுதி வரை கொண்டு செல்வது உறுதியாகிவிட்டதோடு, அவர்தான் இந்த சீசனின் வின்னராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சமூக வலைத்தளங்களில் கமெண்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. கமல் கூறியபடி மக்களின் எண்ணங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அது உரிய நேரத்தில் தண்டிக்கப்படும் என்பதும் அதற்கு துணை போனவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout