புகழ்ச்சியா? வஞ்சப்புகழ்ச்சியா? ரஜினி குறித்து பிரபல இயக்குனரின் டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து தமிழக, இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் தலைப்பு செய்தியில் வெளியிட்டு வரும் நிலையில் ரஜினியின் அரசியல் நிலை குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்,.

இந்த நிலையில் ரஜினியை கடுமையாக அவ்வப்போது விமர்சனம் செய்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ரஜினியின் கருத்து குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். ஒருசிலரால் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும், ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த உரையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை பாராட்டியுள்ள இயக்குனர் ராம்கோபால் வர்மா, 'ரஜினி கூறிய மிகப்பெருமையுடை கருத்து இது' என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ரஜினியை அவர் உண்மையில் புகழ்கிறாரா? அல்லது வஞ்சப்புகழ்ச்சியா? என்ற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகின்றனர். உண்மை என்ன என்பது ராம்கோபால் வர்மாவின் மனதிற்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 62' படத்தின் முதல்-முக்கிய பணி ஆரம்பம்

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அரசியல் எண்ட்ரி குறித்த ராகவா லாரன்ஸ் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்,

ரஜினி கட்சியில் சேருவது ஏன்? ராஜூ மகாலிங்கம் விளக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றுவதற்காக லைகா நிறுவனத்தின் கிரியேட்டிங் ஹெட் பதவியில் இருந்து ராஜூ மகாலிங்கம் விலகியுள்ளார் என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

பதவியில் இருந்து திடீரென விலகி ரஜினி கட்சியில் சேரும் பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அவருடைய கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ஆலய விசிட்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இருவரும் இணைந்து பிறந்த நாள் உள்பட பல்வேறு நாட்களில் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.