காதலருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்வது ஒன்றும் புதிதில்லை. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கணவன், மனைவியாகிய பாலஜி-நித்யா கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு நடிகை தனது காதலருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாலிவுட்டின் சர்ச்சை நடிகை என்ற பெயரை பெற்றவர் ராக்கி சாவந்த். இவர் சல்மான்கான் விரைவில் நடத்தவிருக்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது பாகத்தில் காதலர் தீபக்குடன் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான சல்மான்கானுக்கு அவர் நன்றி தெரிவித்து தனது காதலர் தீபக்குடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் வரும் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஒருசில நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளிவந்தாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.