பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் அகற்றமா? பிரேம்ஜியின் மாஸ் பதில்!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசில பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்த பத்திரிகையாளர்கள், வீட்டின் உள்ளே 'விருமாண்டி' கமல் ஓவியமும், 'பேட்ட' ரஜினி ஓவியமும் இருந்ததை குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்த செய்தியும் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டை சின்னத்திரையில் பார்த்தபோது ரஜினியின் ஓவியம் மிஸ் ஆகியிருந்தது தெரிய வந்தது. கமலின் 'விருமாண்டி' ஓவியம் மட்டுமே இருந்தது.

இதுகுறித்து ஒரு பத்திரிகையாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'கடந்த வாரம் நான் நேரில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தபோது காணப்பட்ட ரஜினியின் ஓவியம் தற்போது அகற்றப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை தருகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, 'மக்களின் மனதை விட்டு அவரை யாராலும் அகற்ற முடியாது' என்று மாஸ் பதில் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கமல், ரஜினி ஆகிய இருவரும் நாற்பதாண்டு கால நண்பர்கள் என்று ஒருவரை ஒருவர் கூறிக்கொண்டாலும் இருவரும் திரையுலகிலும் சரி, அரசியல்ரீதியிலும் சரி போட்டியாளர்கள்தான். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சனம் செய்ய கமல் தயங்குவதில்லை. இந்த நிலையில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஜினியின் ஓவியம் அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதில் கமல் தலையீடு இருந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த சர்ச்சையை தவிர்த்திருக்கலாம் என்றே பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

More News

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது வீட்டில் தன்னுடைய சிறுவயது அனுபவங்களுடன் தொடங்கி வைத்தார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து!

சென்னையில் கடந்த சில நாட்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் குறை கூறாமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு இடைஞ்சல் செய்யாமல்,

ரஜினியின் தபால் வாக்கு குறித்து கமல் கருத்து!

தபால் வாக்கு படிவம் சரியான நேரத்தில் கிடைக்காததால் மும்பையில் இருக்கும் நடிகர் ரஜினி, தனது வாக்கை பதிவு செய்ய முடியவில்லை என்று தனது டுவிட்டர் மூலம் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

மொபைல் இல்லை, டிவி இல்லை: கஸ்தூரியின் பிக்பாஸ் பிரதேசம் இதுதான்!

மொபைல் இல்லை, டிவி இல்லை, எந்த வித தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரு ஸ்டார் ஓட்டல் போன்ற ஒரு சிறையில் இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்

நடிகர் சங்க தேர்தலிலும் கள்ள ஓட்டா? மைக் மோகனால் ஏற்பட்ட பரபரப்பு!

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகனின் ஓட்டை மர்ம நபர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டுவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது