பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் அகற்றமா? பிரேம்ஜியின் மாஸ் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசில பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்த பத்திரிகையாளர்கள், வீட்டின் உள்ளே 'விருமாண்டி' கமல் ஓவியமும், 'பேட்ட' ரஜினி ஓவியமும் இருந்ததை குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்த செய்தியும் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டை சின்னத்திரையில் பார்த்தபோது ரஜினியின் ஓவியம் மிஸ் ஆகியிருந்தது தெரிய வந்தது. கமலின் 'விருமாண்டி' ஓவியம் மட்டுமே இருந்தது.
இதுகுறித்து ஒரு பத்திரிகையாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'கடந்த வாரம் நான் நேரில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தபோது காணப்பட்ட ரஜினியின் ஓவியம் தற்போது அகற்றப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை தருகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, 'மக்களின் மனதை விட்டு அவரை யாராலும் அகற்ற முடியாது' என்று மாஸ் பதில் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கமல், ரஜினி ஆகிய இருவரும் நாற்பதாண்டு கால நண்பர்கள் என்று ஒருவரை ஒருவர் கூறிக்கொண்டாலும் இருவரும் திரையுலகிலும் சரி, அரசியல்ரீதியிலும் சரி போட்டியாளர்கள்தான். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சனம் செய்ய கமல் தயங்குவதில்லை. இந்த நிலையில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஜினியின் ஓவியம் அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதில் கமல் தலையீடு இருந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த சர்ச்சையை தவிர்த்திருக்கலாம் என்றே பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.
Having stayed at #BiggBossTamil3 house for a day last week, I am surprised that @rajinikanth portrait painted on the wall has been removed now. @vijaytelevision
— bharathnt (@bharath1) June 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com