அமீர்கானுக்கு டப்பிங் குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்துள்ள 'டங்கல்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் டிசம்பர் 23ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் அமீர்கான் கேரக்டருக்கு ரஜினிகாந்த் டப்பிங் குரல் கொடுக்க வேண்டும் என்று அமீர்கான் விருப்பம் தெரிவித்தாராம். தன்னுடைய கேரக்டருக்கு ரஜினிகாந்த் வாய்ஸ் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதியதாக கூறப்படுகிறது. அமீர்கானின் விருப்பத்தை ஏற்று ரஜினிகாந்த் டப்பிங் செய்தாரா? என்பது விரைவில் தெரியவரும்

இந்நிலையில் இந்த படத்தை ரஜினிகாந்த் அவர்களுக்காக பிரத்யேக காட்சி ஒன்றை அமீர்கான் ஏற்பாடு செய்ததாகவும், இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், அமீர்கானின் நடிப்பையும், அவருடைய கேரக்டரையும் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.