சூர்யாவின் 'காப்பான்' படவிழாவில் 'சிவாஜி' பட பிரபலங்கள்?

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'சிவாஜி' படத்திற்கு' காப்பான்' பட இயக்குநர் கேவி ஆனந்த் அவர்கள் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உண்மையானால் ரஜினி, சங்கர், சூர்யா ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமரும் விழாவாக 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது