close
Choose your channels

முன்னணி இயக்குனர்களை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

Sunday, April 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர்களை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களாக ஷங்கர் மற்றும் ஏஆர் முருகதாஸ் ஆகிய இருவரும் முன்னணி இடத்தில் உள்ளனர். ஷங்கர் ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் ஏஆர் முருகதாஸ் சமீபத்தில் வெளியான ’தர்பார்’ படத்திற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் ஷங்கர், முருகதாஸைவிட கிட்டத்தட்ட இருமடங்கு சம்பளம் வாங்கும் இயக்குனராக ராகவா லாரன்ஸ் உள்ளதாக ஆச்சரியமான செய்திகள் வெளியாகி உள்ளது தற்போது அவர் அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கி வரும் ’காஞ்சனா’ என்ற தமிழ் படத்தின் ரீமேக் படமான ’லட்சுமிபாம்’ திரைப்படத்திற்கு அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் 50 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஷங்கர், முருகதாஸ் ஆகியோர்களை விட கிட்டத்தட்ட இருமடங்கு சம்பளம் பெறும் இயக்குனராக ராகவா லாரன்ஸ் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது 

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கும் வசூல் செய்ததால் அவரது சம்பளம் திடீரென உயர்ந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment