ராகவா லாரன்ஸ் அடுத்த படம் டிராப்பா? படக்குழுவினர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அதிகாரம்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் டிராப் என நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அதிகாரம்’ படத்தின் திரைக்கதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் இந்த படம் ட்ராப் என்று வெளியாகியிருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் ’அதிகாரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளனர்.
ராகவா லாரன்ஸ் தற்போது ’சந்திரமுகி 2’, ‘ருத்ரன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் துரைசெந்தில்குமார் நயன்தாராவின் 81வது படத்தை இயக்க உள்ளார். இதனை அடுத்து வெகுவிரைவில் ராகவா லாரன்ஸ் மற்றும் துரை செந்தில்குமார் ஆகிய இருவரும் ’அதிகாரம்’ படத்திற்காக இணைவார்கள் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
It’s really shocking to notice rumours spreading about our project #Adhigaaram getting dropped.
— Five Star Creations LLP (@5starcreationss) November 23, 2022
We firmly announce the script works & shoot plans for #Adhigaaram is ongoing smoothly.@offl_Lawrence @Dir_dsk @kathiresan_offl @johnsoncinepro
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments