10 ஆண்டு காதலரை பிரேக் அப் செய்துவிட்டாரா பிரியா பவானிசங்கர்?
- IndiaGlitz, [Tuesday,November 02 2021]
நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை பத்தாண்டு காலமாக காதலித்து வந்த நிலையில் திடீரென அவரது இன்ஸ்டாகிராம் பதிவால் அவரது காதல் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளினி, சீரியல் நடிகை என பிரபலமாகி அதன் பின் பெரிய திரையில் ’மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பதும் சுமார் அரை டஜன் படங்களுக்கு மேல் அவர் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை பிரியா பவானிசங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் பதிவு செய்யும் ரொமான்ஸ் பதிவுகள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருவது வழக்கமான ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராம் பதிவில் ’யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என்னுடைய ரியாக்சன் இதுதான்’ என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த மீம்ஸ்ஸில் இருந்து அவர் தனது காதலரை பிரிந்து விட்டாரா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர். இது குறித்து பிரியா பவானி சங்கர் விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.