'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தில் பிரபாஸ்? இயக்குனர் அளித்த பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் ’மிஷன் இம்பாஸிபிள்’ என்ற திரைப்படத்தின் 6 பாகங்கள் உலக அளவில் மிகப்பெரிய ஹிட்டாகிய நிலையில் தற்போது இந்த படத்தின் 7ஆம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் ’மிஷின் இம்பாசிபிள் 7’ படத்தில் ’பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து டுவிட்டர் டிரெண்டில் வந்துவிட்ட நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர் ’மிஷன் இம்பாஸிபிள் 7’ படத்தின் இயக்குனருக்கு இதுகுறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துள்ள ’மிஷன் இம்பாசிபிள் 7’ பட இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்கோரி நடிகர் பிரபாஸ் திறமையான நடிகர், ஆனால் அதே நேரத்தில் இந்த படம் தொடர்பாக அவரை நான் சந்தித்ததே இல்லை’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தில் பிரபாஸ் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகிய மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
While he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com