ஆரவ் படத்தின் நாயகி ஓவியாவா? ஆர்மியினர் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ஆரவ்வும், மக்களின் வின்னரான ஓவியாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டாலும் இந்த செய்தியை இன்னும் இருவரும் உறுதி செய்யவில்லை. இருப்பினும் இருவரும் ஒருசில பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 'தாதா 87' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்ஸ்ரீ, தனது அடுத்த படத்தின் ஹீரோவாக ஆரவ்வை ஒப்பந்தம் செய்தார் என்று வெளியான செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்த செய்தியின்படி இந்த படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் விஜய்ஸ்ரீ கூறியபோது, 'இந்த படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் நாயகி கேரளாவை சேர்ந்தவர் என்பது உறுதி' என்று கூறியுள்ளார்.

ஓவியாவும் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி கிட்டத்தட்ட உண்மை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ஆரவ்-ஓவியா சில நாட்கள் காதலர்களாக இருந்தனர். அந்த கெமிஸ்ட்ரி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால் திடீரென ஆரவ், ஓவியாவின் காதலை ஏற்காமல் பின்வாங்கிவிட்ட நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் ஓவியா ஆர்மியினர் மட்டும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.அ