நம்ம ஊரு மஞ்சள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுகிறதா??? ஆய்வு முடிவு வெளியிட்ட விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஐஐடியின் உயிரி தொழில் நுட்பத் துறையின் ஆராய்ச்சி குழு புற்றுநோயைக் குணப்படுத்துவதில் மஞ்சள் சிறந்த பங்களிக்கிறது என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக இந்தியப் பண்பாடுகளில் மஞ்சள் முக்கிய இடத்தை வகிக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியர்களின் மருத்துவத்தில் முக்கிய கிருமிநாசியாகவும் இடம்பிடித்து இருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மஞ்சள் தற்போது புற்றுநோய் சிகிச்சையிலும் பெரும் உதவியாக இருக்கும் என்ற செய்தியை ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.
மஞ்சளில் இருக்கும் ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் நச்சுத் தன்மை இல்லாதது என்றும் இந்த வேதிப்பொருள் இரத்த அணுக்களில் உள்ள புற்றுநோய் அணுக்களை மிக எளிதாக அழித்து விடும் தன்மைக் கொண்டது என்றும் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். பொதுவாக மனிதச் செல்களில் இருக்கும் அணுக்களை புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் அழித்து விடுகிறது. இதனால் புற்று நோய் பாதித்த நபர்களின் உறுப்புகள் முற்றிலும் சேதமடைந்து கடைசியில் உயிரிழப்பு நேரிடுகிறது. புற்றுநோய் பாதித்த நபர்களின் நல்ல அணுக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் புற்று நோய் அணுக்களை மட்டும் அழிக்கும் தன்மை மஞ்சளின் குர்குமினுக்கு இருப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சையில் மனித செல்லுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாக காரியம் என்றே மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. தற்போது மஞ்சளில் இருக்கும் குர்குமின் மனித செல்லுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் புற்றுநோய் அணுக்களை மட்டும் தாக்கி அழித்துவிடும் எனக் கண்டுபிடிக்கப் பட்டு இருப்பதால் விஞ்ஞானிகளின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியே ஏற்பட்டு இருக்கிறது. சென்னை ஐஐடி உயிரிதொழில் நுட்பத் துறையின் பேராசிரியர் டாக்டர் ராமவர்மா கூறும்போது குர்குமினில் இருக்கும் துடிப்பான வேதிப்பொருள் புற்று நோய் அணுக்களை மிக எளிதாக அழித்து விடும் என்றும் அதனால் மனித செல்லில் உள்ள அணுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதைத்தவிர குர்குமின் நச்சுத் தன்மை இல்லாதது என்ற செய்தி மருத்துவ உலகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் ஏற்படும் லுகிமியா புற்றுநோய் அணுக்களை தாக்கி அழிப்பதில் இந்த குர்குமின் சிறந்த பணியாற்றுவதாகவும் அந்தக் குழு தெரிவித்து இருக்கிறது. புற்றுநோய் சிகிச்சையில் ஆரோக்கியமான அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் சிகிச்சை அளிக்க முடியும் என்ற செய்தி தற்போது மருத்து உலகில் மிகவும் வரவேற்கத் தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments