உடல்பருமனாக இருப்பது தவறா? போட்டோ ஷுட்டால் தக்கப் பதிலடி கொடுத்த நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
உடல்பருமன் குறித்த எதிர்மறை எண்ணங்களை போக்கும் வகையில் மலையாள நடிகை ஒருவர் வித்தியாசமான போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுவருகின்றன.
மலையாள சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “காக்ஷி அம்மினிப்புள்ளா“ திரைப்படத்தில் படு அசத்தலான நடிப்பை கொடுத்து பிரபலமானவர் நடிகை ஃபரா ஷில்பா. இவர் சற்று பப்ளி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் உடல்பருமன் குறித்த எதிர்மறை எண்ணங்களை உடைக்கும் வகையில் பிகினி உடையணிந்து போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.
ப்ரிம்மிங் ஃபரா எனும் தலைப்பில் இவர் நடத்தியுள்ள இந்தப் போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றன. மேலும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஃபரா ஷில்பா, “என் உடல் உங்களது நுகர்பொருள் அல்ல. என் உடல் என்பது என்னுடைய பாத்திரம். அது என் அனுபவங்களின் காப்பகம்.
மேலும் நான் மட்டும் புரிந்துகொள்ளக் கூடிய யுத்தங்களை சந்திக்க ஒரு ஆயுதம். காதல், வலி, போராட்டம், வெற்றி, புதிர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நூலகம், அது தாங்கிய அனைத்தையும் உங்கள் கண்களால் வரையறுக்க இயலாது. என் உடல் மீது உங்கள் மதிப்பீட்டை வைக்க வேண்டாம். அதை என் இருப்பின் மீது வையுங்கள்“ எனப் பிரபல கவிஞர் சோஃபி லெவிஸ் அவர்களின் வரிகளை கேப்ஷனில் பதிவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com