சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் மோகன்லால் நடிக்க இருந்தாரா? அப்புறம் என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் மோகன்லால் நடிக்க இருந்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சிவக்கார்த்திகேயன், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் மோகன்லால் ஏற்கனவே சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட தேதியை கால்ஷீட் ஆக கேட்டதால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தான் மோகன்லாலுக்கு பதிலாக ’எஸ்கே23’ படத்தில் பிஜூ மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அவரது காட்சியின் படப்பிடிப்பு மிக விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மோகன்லாலுக்கு மட்டும் கால்ஷீட் தேதி இருந்து ’எஸ்கே 23’ படத்தில் நடித்திருந்தால் அந்த படம் மாஸாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் பிஜூ மேனன் நிச்சயம் மோகன்லால் இடத்தை நிரப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.