தேசிய கீதத்தை நாட்டுப்புற பாடல் என கூறினாரா மு.க.ஸ்டாலின்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்ட சீர்காழியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியபோது எழுந்து நிற்க முடியாதவர்கள் நாட்டுப்புற பாடல் ஜன கன மன பாடுகிறபோது எழுந்து நிற்கிறார். அது நியாயமா என்று கேட்டால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிற போது அவர் தியானத்தின் இருந்ததாக கூறுகின்றனர்' என்று பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
ஆனால் இதுகுறித்து திமுகவினர் கூறியபோது, 'மு.க.ஸ்டாலின் நாட்டுப்புற பாடல் என்று கூறவில்லை என்றும் நாட்டுப்பண் பாடல் என்று சரியாகவே கூறியதாகவும் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout