தேசிய கீதத்தை நாட்டுப்புற பாடல் என கூறினாரா மு.க.ஸ்டாலின்?

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை மாவட்ட சீர்காழியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியபோது எழுந்து நிற்க முடியாதவர்கள் நாட்டுப்புற பாடல் ஜன கன மன பாடுகிறபோது எழுந்து நிற்கிறார். அது நியாயமா என்று கேட்டால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிற போது அவர் தியானத்தின் இருந்ததாக கூறுகின்றனர்' என்று பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

ஆனால் இதுகுறித்து திமுகவினர் கூறியபோது, 'மு.க.ஸ்டாலின் நாட்டுப்புற பாடல் என்று கூறவில்லை என்றும் நாட்டுப்பண் பாடல் என்று சரியாகவே கூறியதாகவும் கூறி வருகின்றனர்.

More News

அக்சயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மறுத்த ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ச்ன்ஸ் மற்றும் VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அக்சயகுமார் வேடத்தை ஏற்ற ஜெயம் ரவி

அக்சயகுமார் நடித்த இந்தியன் சீக்ரெட் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.கே.அஹ்மத் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'என்றென்றும் புன்னகை மற்றும் 'மனிதன்' படங்களை இயக்கியவர்

தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 முதல் அரசியல் களத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து குதிக்கவுள்ள நிலையில் இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைமுன்னோட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இந்த ஆண்டின் முதல் படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'

நார்வே தமிழ் திரைப்பட விழா: விருதுகளை அள்ளிய 'அருவி'

ஒவ்வொரு ஆண்டும் நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.