close
Choose your channels

'மாஸ்டர்' மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? குழப்பத்தை ஏற்படுத்திய போட்டோஷூட்

Sunday, December 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற சந்தேகத்தை அவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் ஒன்று கிளம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தின் மூலம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது தனுஷ் நடித்துள்ள ’மாறன்’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனனின் இன்ஸ்டாவில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாளவிகா பதிவு செய்துள்ள லேட்டஸ் போட்டோஷூட் புகைப்படத்தில் அவரது காலில் மெட்டி இருப்பது போன்று உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் மாளவிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர். இருப்பினும் போட்டோஷுட் புகைப்படத்திற்காக அவரது காலில் செய்யப்பட்ட அலங்காரத்தில் ஒரு பகுதிதான் அது என்றும், அது மெட்டி போல ரசிகர்களுக்கு தெரிகிறது என்றும் மாளவிகா மோகனன் தரப்பினர் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment