என்ன ஆச்சு மணி - ரவீனா ரிலேஷன்ஷிப்? திடீர் பிரச்சனைக்கு என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்து மணி மற்றும் ரவீனா நெருக்கமாக இருந்தனர் என்பதும் இந்த சீசனின் காதல் ஜோடி என்றும் பார்வையாளர்களால் விமர்சனம் செய்யப்பட்டனர் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
அதற்கு ஏற்றவாறு இருவரும் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருந்தனர் என்பதும் டாஸ்க்கில் கூட மணிக்காக ரவீனா நிறைய தடவை விட்டுக் கொடுத்ததையும் சக போட்டியாளர்கள் விமர்சனம் செய்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் எவிக்சன் ஆன ரவீனா தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் மணி அவரை வெறுப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக என்னை வெறுக்கிறீர்கள் என்று ரவீனா கேட்டதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான், இனிமேல் ஒட்டவே மாட்டேன் என்று மணி கூறினார்.
வெளியே போய் நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்று ரவீனா சமாதானப்படுத்திய போதும் மணி உடனே ரவீனாவை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார். ரவீனா இதனால் சோகமாக இருக்கிறார்.
மணி - ரவீனா ரிலேஷன்ஷிப்பில் என்ன ஆனது? மணி திடீரென ரவீனாவை வெறுக்க என்ன காரணம் என்று புரியவில்லை. இன்றைய எபிசோடில் இது குறித்து தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments