'ராக்கெட்டரி' படத்தால் சொந்த வீட்டை இழந்தாரா மாதவன்?

  • IndiaGlitz, [Wednesday,August 17 2022]

மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெள்ளை கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ராக்கெட்டரி’ படத்தின் விமர்சனம் நன்றாக இருந்தாலும் வசூலில் திருப்தியாக இல்லை என்றும் சிலர் கூறினர். மேலும் ஒரு சிலர் ’ராக்கெட்டரி’ படத்தின் குறைந்த வசூல் காரணமாக நடிகர் மாதவன் தனது சொந்த வீட்டை இழந்தார் என்றும் கூறினர்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், ’ராக்கெட்டரி’ படத்தால் மாதவன் தன்னுடைய சொந்த வீட்டை இழந்தார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது மகன் நாட்டிற்காக நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை பெற்று வருகிறார் என்றும் பதிவு செய்திருந்தார்

இந்த பதிவுக்கு மாதவன் பதிலளித்த போது, ‘தயவு செய்து என்னை பெரிய தியாகி ஆக்க வேண்டாம். நான் எனது வீட்டையோ அல்லது வேறு எதையும் இழக்கவில்லை. உண்மையில் ’ராக்கெட்டரி’ தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிக வருமான வரியை பெருமையுடன் செலுத்த உள்ளார்கள். கடவுள் அருளால் நாங்கள் அனைவருமே இந்த படத்தால் நல்ல லாபத்தை பெற்று உள்ளோம். நான் இன்னும் எனது சொந்த வீட்டில் தான் இருக்கிறேன்’ என்று பதில் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.