ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவின் பிரச்சார பாணி பலன் கொடுக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுகவில் சில ஆண்டுகள், காங்கிரஸில் சில ஆண்டுகள் என அரசியலில் ஈடுபட்ட குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்து அந்த கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக மாறியுள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் அவர் பல ஆண்டுகள் இருந்தும் அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது பாஜகவில் இணைந்த ஒருசில மாதங்களிலேயே தேர்தலில் போட்டியிட கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி அவர் எம்எல்ஏ ஆகி சட்டமன்றத்திற்குள் நுழைவரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவரது பிரசார பாணியே வித்தியாசமாக இருப்பதாக அந்த தொகுதி மக்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த காலத்தில் ஆண் வேட்பாளர்களே வாகனத்திலிருந்து கீழே இறங்கி பிரச்சாரம் செய்ய தயங்கி வரும் நிலையில், வாகனமே இல்லாமல் ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் குஷ்பு நடந்தே பிரச்சாரம் செய்து வருவது அந்த பகுதி மக்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
மேலும் ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி வாக்காளர்களின் கையை பிடித்து ’நான் ஒரு பெண் எனக்கு ஒரு பெண்ணின் கஷ்டம் தெரியும், நானும் ஒரு தாய் எனக்கு குழந்தைகள் கஷ்டம் தெரியும் என்று ஆதரவாக பேசுவது அந்த பகுதி வாக்காளர்களை கவர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
முக ஸ்டாலின் இந்த தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பதும், ஆயிரம் விளக்கு எப்போதும் திமுகவின் கோட்டையாக இருந்து வரும் தொகுதி என்று கூறப்படும் நிலையில் இந்த தொகுதியில் குஷ்பு வெற்றி பெறுவாரா? முதல் முதலாக சட்ட மன்றத்திற்குள் சென்று சாமானியனின் குரலாக ஒலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout