வடகொரியா அதிபர் இறந்துவிட்டாரா? சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தி
- IndiaGlitz, [Sunday,April 26 2020]
அமெரிக்காவுடன் அணு ஆயுத விஷயத்தில் மோதல் போக்கை கடைபிடித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்கள் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூரை சேர்ந்த ஆன்லைன் தொலைக்காட்சி ஒன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் உடலை வெளியிட்டு அவர் இறந்துவிட்டதாக செய்தி ஒளிபரபரப்பி வருகிறது.
ஆனால் இது குறித்து வடகொரியாவோ, அண்டை நாடான தென்கொரியாவோ, அமெரிக்காவோ எந்த ஒரு உறுதி செய்யப்பட்ட செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிவிட்டரில் #KIMJONGUNDEAD என்ற ஹேஷ்டேட் டிரெண்டாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் கடைசியாக ஏப்ரல் 11 ஆம் தேதி ஊடகத்திற்கு முன் காணப்பட்டார் என்றும், ஏப்ரல் 12ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் கடந்த 15 நாட்களாக அவர் ஊடகம் முன் தோன்றவில்லை என்பது அவர் குறித்த வதந்திகளின் சந்தேகங்களை அதிகரிக்கின்றது.