கவின் - லாஸ்லியா காதல் வெறும் நடிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளில் ஒன்று கவின் - லாஸ்லியா காதல். இந்த காதல் குறித்த புரமோ வீடியோக்களை வெளியிட்டுத்தான் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தினார்கள். சமூக வலைதளங்களிலும் இந்த காதலுக்கு பெரும் ஆதரவும் இருந்தது
இந்த காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை மற்றும் சேகரன் உள்பட ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் கடைசி நிமிடம் வரை இந்த காதல் தொடர்ந்து கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பேசிய உரையாடல்களில் இருவரும் வெளியே சென்றவுடன் காதலை தொடரலாம் என்றும் இரு தரப்பின் பெற்றோர்களை சந்தித்து, இந்த காதலை திருமணம் வரை கொண்டு செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாட்கள் ஆன போதிலும் கவினும், லாஸ்லியாவும் சந்தித்து கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் நடந்த இந்த காதல் நடிப்பா? என்ற கேள்வி எழுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலும் லாஸ்லியாவின் தோழிகள் பதிவு செய்துள்ள சமூக வலைதள பதிவுகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக லாஸ்லியா காதலிப்பது போல் நடித்ததாகவும், அவர் இன்னும் சிங்கிள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் கவின், லாஸ்லியா ஆர்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த பிக்பாஸ் குழுவினர்களே இந்த காதலுக்கு திரைக்கதை எழுதியிருக்கலாம் என்றும், இந்த பொய்யான காதலுக்கா இத்தனை நாட்கள் ஆதரவு தந்தோம் என்றும் சமூக வலைதள பயனாளர்கள் புலம்பி வருகின்றனர். இந்த காதல் உண்மையா? பொய்யா? என்பதை சம்பந்தப்பட்ட கவின் மற்றும் லாஸ்லியா வாயை திறந்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments