close
Choose your channels

கஸ்தூரியின் 'மய்யம்' சந்தேகத்தை கமல் தீர்ப்பாரா?

Friday, February 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று  முன் தினம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயரில் தொடங்கினார். இதுவரை தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பெரும்பாலான கட்சிகள் 'கழக'ம் என்றோ, 'கட்சி' என்றோ தான் முடியும். ஆனால் கமல்ஹாசனின் கட்சி மய்யம் என்று முடிவதே ஒரு புதுமையாக உள்ளது.

இந்த நிலையில் இந்த 'மய்யம்' குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ? மையம் வேற , மய்யம் நா வேற போல. சரி, அத்த வுடு. ம-ய்-ய-ம் இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm மைஅம் னு வருது .... இந்த சந்தேகத்திற்கு எனக்கு இப்பவே விடை தெரிஞ்சாகணும் என்று தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சினேகன், வையாபுரி, ஸ்ரீப்ரியா, விஜய் டிவி மகேந்திரன் என மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு. விவோ தான் பிரதான ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட வரும்ல? என்றும் கிண்டலாக நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கஸ்தூரியின் சந்தேகத்திற்கு நெட்டிசன்கள் பலவிதமான பதில்களை அளித்து வருகின்றனர். ஏற்கனவே தனது கட்சியின் கொள்கை இடதுசாரியாகவும் இல்லாமல், வலதுசாரியாகவும் இல்லாமல் தராசின் முள்போல் மய்யமாக செயல்படும் என்று கட்சி ஆரம்பித்த அன்றே கமல் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் கஸ்தூரிக்காக இன்னுமொரு முறை அவர் விளக்கம் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment