டைட்டிலை லீக் செய்த நாயகி மீது கடுங்கோபத்தில் கார்த்தி படக்குழுவினர்

  • IndiaGlitz, [Tuesday,August 20 2019]

ஒரு படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், ஆகியவற்றை அந்த படத்தின் குழுவினர் சஸ்பென்ஸ் வைத்து ஒரு சரியான தேதியில் வெளியிடுவதே தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. ஆனால் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் டைட்டிலை லீக் செய்தது அந்த படத்தின் குழுவினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது

கார்த்தி நடிப்பில் ரொமோ' இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ள திரைப்படம் ஒன்றின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் 'சுல்தான்' என ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு தெரிவித்துவிட்டார். இதனால் படக்குழுவினர் அவர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்,. இதுகுறித்து கார்த்தியும் நாயகி ராஷ்மிகா மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தனது செயலுக்கு ராஷ்மிகா வருத்தம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

எஸ்.ஆர்.பிரபு அவர்களின் தயாரிப்பில் விவேக் மெர்வின் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.