ரஜினியிடம் பாராட்டு பெற்ற நடிகருக்கு அடிக்க போகிறதா ஜாக்பாட்?

  • IndiaGlitz, [Saturday,February 13 2021]

முதல் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் பாராட்டு பெற்ற நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை அவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனக்கேற்ற கதை ஏதாவது இருங்கள் என்று அவர் கூறிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு செய்தி என்னவெனில் சமீபத்தில் ரஜினிகாந்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி நேரில் சென்று பார்த்து ஒரு கதை கூறியதாகவும் விரைவில் அவர் ரஜினி படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்தோ அல்லது தேசிங்கு பெரியசாமி தரப்பில் இருந்தோ உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’அண்ணாத்த’ படத்தை முடித்தவுடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்ற ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் போது, தற்போது தேசிங்கு பெரியசாமியும் ரஜினியை சந்தித்து உள்ளதாக பரவி வரும் செய்தியை அடுத்து அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் ஜாக்பாட் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.