சிரஞ்சீவி பாணியில் கட்சியை கலைக்கின்றாரா கமல்?
- IndiaGlitz, [Friday,October 19 2018]
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடந்த 2008ஆம் ஆண்டு பிரஜ்யா ராஜ்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சி 2009ஆம் ஆண்டு நட்ந்த சட்டமன்ற தேர்தலில் 295 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார்.
இதே பாணியில் கமல்ஹாசன் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க ராகுல்காந்தியை சந்தித்தபோது பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மதுரையில் இன்று பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியின்போது திமுக கூட்டணி இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கமல் கூறியிருந்த நிலையில் திருநாவுக்கரசரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் உண்மையில் ராகுல்காந்தியை கமல் சந்தித்தபோது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மட்டுமே ஆலோசனை நடத்தியிருப்பார் என்று கூறப்படுகிறது.