கமல்ஹாசனின் அடுத்த படம் டிராப்பா? இயக்குனர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருபக்கம் சூர்யாவின் ’வணங்கான்’ திரைப்படம் டிராப் என்ற நிலையில் இன்னொரு பக்கம் கமல்ஹாசனின் அடுத்த படமும் டிராப் என சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படம் ’தேவர்மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், அதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க உள்ளார்.
இதன் காரணமாக கமல்ஹாசன் மகேஷ் நாராயணன் இணையும் படம் டிராப் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்த நிலையில் இதுகுறித்த தகவலை மகேஷ் நாராயணன் இந்த தகவலை மறுத்துள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் எனது இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் கண்டிப்பாக உருவாகும் என்றும், ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் சில படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் அந்த படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக என்னுடைய இயக்கத்தில் நடிப்பார் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து கமல்ஹாசன் - மகேஷ் நாராயணன் படம் டிராப் இன்று வெளியான செய்தி வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments