'அஜித் 57' படத்தின் வில்லன் இவரா? புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,June 16 2016]

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' படத்தில் சூப்பர் வில்லனாக நடித்த கபீர்சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'அஜித் 57' படத்திலும் கபீர்சிங் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கவுள்ள அஜித் 57' படத்தின் வில்லன் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இன்று கபீர்சிங் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் அஜித்துடன் 'வேதாளம்' படத்தில் நடித்த அனுபவம் எப்படி? என்று கேட்க அதற்கு கபீர்சிங் 'வேதாளம் படத்தில் நடித்த 25 நாட்களும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். மீண்டும் அதே போன்ற மேஜிக் நாட்களுக்கான அழைப்பு வரும் என விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
கபீர்சிங்கின் இந்த மறைமுக விருப்பத்தை அஜித்தும் சிறுத்தை சிவாவும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆஸ்கார் வின்னரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த 'ரெமோ' குழுவினர்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' இவ்வருடம் பொங்கல் திருநாளில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றதால் இதே வெற்றி ஜோடி நடித்து வரும் அடுத்த படமான 'ரெமோ'...

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த வதந்திக்கு மறுப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது...

பிரபுதேவா-தமன்னா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் திகில் படமான 'தேவி எல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கேரள ரசிகைகளின் மகத்தான சேவை

இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி வரவுள்ளதை அடுத்து அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள்...

'கபாலி'யின் 2வது டீசர் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.