ஜூலியின் காதலர் இவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் தனது நெகட்டிவ் குணங்களால் டிரெண்டுக்கு ஆளான ஜூலி அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒருவருடன் அவர் நெருக்கமாக இருப்பதாகவும், அவருடன் டேட்டிங் செல்வதாகவும் கூறப்பட்டது. மேலும் ஜூலி தனது பிறந்த நாளை சமீபத்தில் அந்தமானில் கொண்டாடியபோது அந்த நபரும் அந்தமானுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் ஜூலியுடன் டேட்டிங் செய்யும் அந்த நபர் மார்க் ஹம்ரான் என்றும் சென்னையை சேர்ந்த இவர் மாடலிங் செய்வதாகவும் புகைப்படத்துடன் ஜூலி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலியின் இந்த டுவீட்டுக்கு ஏராளமான கிண்டல் பதில்களும் ஒருசில வாழ்த்து பதிவுகளும் நெட்டிசன்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout