close
Choose your channels

கபாலி'யில் ஜெட்லி நடிப்பது உண்மையா? படக்குழு விளக்கம்

Saturday, January 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெட்லி நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தவாறு இருந்தது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடிக்கும் '2.0' படத்தில் அர்னால்ட் நடிக்கவிருந்து பின்னர் அவர் படத்தில் விலகியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 'கபாலி'யிலும் ஜெட்லி நடிக்கவில்லை என்ற தகவல் வந்துள்ளது.

'கபாலி' வில்லனாக ஹாலிவுட் ஸ்டார் ஒருவரை நடிக்க வைக்க பரிசீலனை செய்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டதாகவும் 'கபாலி'யில் ஜெட்லி நடிக்கவில்லை என்றும் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.


ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, 'மெட்ராஸ்' கலையரசன், 'அட்டக்கத்தி' தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படம், வரும் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment