இன்னும் கொஞ்ச நாள்தான்.. வெளியான உலகம் அழியும் புதிய தேதி… ஆராய்ச்சி வீடியோ!!!
- IndiaGlitz, [Wednesday,December 23 2020]
2020 ஆம் ஆண்டு பிறந்த உடனே இந்த உலகம் அழிந்துவிடுமா என்ற அச்சம் பலரின் மனதில் எழுந்தது. அதற்குக் காரணம் மாயன் காலண்டர் விதிப்படி இந்த பூமி 2020 இல் அழிந்து விடும் எனக் கூறப்பட்டது. அப்படி சொன்ன நேரமோ.. என்னமோ.. 2020 பிறந்ததில் இருந்தே கடும் சிக்கல். உலகம் முழுவதும் கொரோனா பரவலோடு சேர்த்து பொருளாதார வீழ்ச்சி, வறுமை, வேலையிழப்பு, ஏன் புதுப்புது நோய்த் தாக்கங்களும் ஏற்பட்டு மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. சரி இதோடு 2020 முடிந்து விடும் என நினைக்கும்போதே உலகம் அழியும் புது தேதி குறித்த அறிவிப்பு தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காலநிலை மறுசீரமைக்கான விஞ்ஞானிகள் குழு கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த ஆய்வின்படி வரும் 2050 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை 3% அதிகரித்து அதனால் மனித வாழ்க்கையில் பெரும் சிக்கல் தோன்றும் எனக் கூறியுள்ளனர். தேசிய மையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி வரும் 2050 இல் உலகத்தின் சராசரி வெப்பநிலை 3% ஆக எகிறும். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் மக்கள் தொகையும் அளிவில்லாம் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பினால் கடும் நெருக்கடி சூழல் உருவாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூமியில் 3% வெப்பநிலை எகிறும்போது விவசாயமும் பலத்த அடி வாங்கும். இதனால் மொத்த விவசாய உற்பத்தில் 5 இல் 1 பங்காக குறையும். இப்படி உணவுப் பொருள் குறையும் போது கூடவே மக்கள் மத்தியில் கூச்சல், குழப்பம், ஏன் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அளவிற்கு கடும் நெருக்கடி உண்டாகும். இந்த நெருக்கடி காரணமாக அடுத்த 10 ஆண்டுகள் உலகம் அழிவை நோக்கி பயணிக்கும். மேலும் அதிரிகத்துக் கொண்டே இருக்கும் வெப்பநிலை காரணமாக பூமியில் அமில மழை பொழியும். இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத மனிதகள் பரிதாபமாக உயிரிழப்பர்.
மேலும் வெப்பநிலை காரணமாக ஆசியப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் பங்கு கணிசமாக குறையும். இதே வெப்பநிலை காரணமாக பூமியில் உள்ள பனிக்கட்டிகள் எல்லாம் உருகி 0.1 மீட்டர் அளவிற்கு கடல் மட்டம் உயரும். இதே வெப்பத்தினால் நன்னீர் நிலைகள் வறண்டுபோய் பூமியின் பெரும் பகுதி பாலைவனமாக மாறும். இதுபோன்ற அடுக்கடுக்கான தகவல்களை அந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்து உள்ளது.
இந்தக் கருத்துக்கு சான்று அளிக்கும் விதமாக நவீன விஞ்ஞானிகளின் தந்தையாகக் கருதப்படும் நியூட்டனும் ஒரு குறிப்பை தந்து உள்ளார். அவர் தன்னுடைய மரணக் குறிப்பில் இந்த பூமி வரும் 2060 ஆம் ஆண்டில் அழியப்போகிறது எனக் குறிப்பிட்டு உள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது. அதோடு உலகின் தேர்ந்த விஞ்ஞானியாக கருதப்படும் ஸ்டீபன் வில்லியன் ஹாக்கின்ஸ் வெளியிட்டு உள்ள தன்னுடைய குறிப்பில் இந்த பூமி அடுத்த 600 ஆண்டுகளுக்குள் நெருப்பு வட்டமாக மாறும் எனத் தெரிவித்து இருந்தார்.
இத்தகைய குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது இந்த பூமி அடுத்த 3 தலைமுறைக்கு மேல் தாங்காது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். வெப்பநிலை அதிகரிப்புதான் இந்த பூமிக்கே எமனாக மாறப்போகிறது என்ற குறிப்பையும் தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றனர்.