அரசியலில் நுழைய இதுதான் சரியான நேரமா? என்ன முடிவெடுப்பார் இளையதளபதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை அடுத்து மிகச்சிறப்பான ஓப்பனிங் வசூல் மற்றும் வெளிநாட்டு வசூல் என்றால் அது இளையதளபதி விஜய் படத்திற்குத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். திருவிழா நாளாக இல்லாமல் இருந்தாலும் விஜய் படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவாக மாற்றிவிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக விஜய் படங்கள் இருப்பதால் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அவரது படங்களின் ஓப்பனிங் வசூல் பிரமாதாமாக இருக்கும்.
இந்நிலையில் கோலிவுட்டின் எழுதப்படாத ஃபார்முலாவின்படி எம்,ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பின்னர் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ள நடிகராகவும் விஜய் கடந்த சில ஆண்டுகளாக பார்க்கப்பட்டு வருகிறார். அவரது விஜய் மக்கள் நல இயக்கமும் அரசியலுக்கான ஆணிவேராக கருதப்படுகிறது.
ஆனால் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை கண்டு, இவர் நமக்கு போட்டி ஆகிவிடுவாரோ என்று இரண்டு திராவிட கட்சிகளும் அச்சம் ஒரு காலத்தில் அச்சம் அடைந்தது உண்மைதான் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. இதனால்தான் அவரது பல படங்களுக்கு ஆட்சியாளர்களிடம் இருந்து மறைமுக எதிர்ப்புகள் வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்க்கும் அரசியல் ஆசை மனதில் இருந்தாலும், தன்னுடைய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவரும் பிரச்சனைகளை அமைதியாக அதே சமயம் ஆக்கபூர்வமாக சந்தித்து வந்தார். மேலும் அரசியலுக்கு நுழைய அவர் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இன்றி காணப்படுகிறது. மக்கள் விருப்பம் ஒருவர் மீது இருக்க, இன்னொருவர் பதவி ஏற்றுள்ளார். டெல்லிக்கு அரவிந்த கெஜ்ரிவால் கிடைத்தது போல் தமிழகத்திற்கு இந்த நேரத்தில் யாராவது புதிய தலைவர் உருவாக மாட்டார்களா? என்று மக்கள் ஏங்கி வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஒரு வாய்ப்பை மக்கள் தருவார்கள் என்றே நம்பப்படுகிறது. விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள நடுநிலை வாக்காளர்களும் இணைந்தால் விஜய்யின் அரசியல் கனவு பலிக்க வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் முடிவு எடுக்க வேண்டியவர் விஜய்தான். அவர் என்ன முடிவை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout