மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைக்கலாமா? மருத்துவம் சொல்வது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் சரியாக இருக்குமா? ஒருவேளை அந்த காலக்கட்டங்களில் உடலுறவு வைத்துக் கொண்டால் பாலியல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா? என்பதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் காணப்படுகிறது.
இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது ஒரு வகையில் பெண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றும் இது மற்ற நோய் தாக்கத்தில் இருந்து பெண்களை விடுவிக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
செபலால்ஜியா மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் பாலியல் செயல்பாடானது (மாதவிடாய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி) சிலருக்கு ஒற்றைத் தலைவலி மற்றும் கிளஸ்டர் தலைவலியை குறைக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மருத்துவர் கேரி கோல்மேன் ‘செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதியாகும். மேலும் அனைத்துப் பெண்களும் இதை அனுபவிக்க வேண்டும்.
இது அடிப்படையில் மாதவிடாய் சுழற்சி காலத்திலும் இருக்கலாம். ஆனால் நல்ல கருத்தடை மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்று தடுப்பு இருப்பதை உறுதி செய்வது அதை இன்னும் பாதுகாப்பானதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால் மாதவிடாய் காலங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதை மருத்துவர்கள் பலரும் ஊக்குவிக்கவே செய்கின்றனர். ஆனால் எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று குறித்தே மருத்துவர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
காரணம் இரத்தபோக்கு இருக்கும் நாட்களில் வைரஸ் தொற்றுகளும் பாலியல் நோய்த் தொற்றுகளும் அதிகமாகப் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆணுறை பயன்பாடு மற்றும் பிற சுகாதார பரிந்துரைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் நோய்த் தடுப்புக்காட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
மேலும் மாதவிடாய் காலங்களில் பொதுவாக பெண்களுக்கு லூப்ரிகண்ட் தேவையே இருக்காது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். காரணம் ஏற்கனவே இரத்தப்போக்கு இருப்பதால் லூப்ரிகண்ட் தேவை குறைந்து, மிக குறுகிய காலத்திலேயே பெண்கள் உச்சக்கட்டத்தை எட்டி விடுவர் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோய் நீக்கி- உடலுறவு என்பதே மகிழ்ச்சி ஹார்மோனின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் மாதவிடாய் நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் ஒருசில பெண்கள் மற்ற நேரங்களைவிட மிகவும் மகிழ்ச்சியாக உணருகின்றனர் என்றும் தசைப்பிடிப்பு, சோகம், மனச்சோர்வு போன்ற பிற நோய்களுக்கு இது மிகச்சிறந்த பதிலீடாக இருக்கிறது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆனால் எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்த்தொற்றுகள் இந்த நேரத்தில் பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆபத்தைக் குறைக்க ஆணுறை பயன்படுத்துவதை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் மாதவிடாய் காலத்திர்ல உடலுறவு கொள்ளும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் ஒருசிலர் கருதி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் உடறலுறவின்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள் 21-24 என்று குறைந்த மாதவிடாய் சுழற்சி இருக்கும் பெண்களுக்கு இந்த நேரத்தில் குழந்தை உண்டாக வாய்ப்பு இருக்கிறது. எனவே எச்சரிக்கை தேவை என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com