ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை தருவது சரியா?
- IndiaGlitz, [Wednesday,February 28 2018]
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய திரையுலகை மட்டுமின்றி அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் மும்பையில் அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது. அவரை ஒரு நடிகையாக பார்க்காமல் தங்கள் வீட்டின் ஒருநபர் போல் அவரது ரசிகர்கள் எண்ணியதால் அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர அரசும் ஸ்ரீதேவிக்கு முழு அரசு மரியாதையுடன் அவரது உடலில் தேசிய கொடியை போர்த்தி கெளரவித்துள்ளது. ஸ்ரீதேவி எந்தவித அரசு பதவியையும் வகிக்காதவர் என்றும் அவருக்கு அரசு மரியாதை தரப்படுவது சரிதானா? என்றும் ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு மாநில அரசுக்கு யாருக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும் என்ற முழு உரிமை உண்டு என்பது ஒருபக்கம் இருக்க, ஸ்ரீதேவி இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றவர். அந்த வகையில் அவருக்கு அரசு மரியாதை செய்வது தவறில்லை என்று இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது. மறைந்த ஒரு மாபெரும் கலைஞரின் இறுதி ஊர்வலத்தை சர்ச்சையில்லாமல் நடத்துவதே அவரது ஆன்மாவுக்கு நாம் செய்யும் ஒரு நற்காரியம் என்பதே அனனவரின் எண்ணமாக உள்ளது.