விண்வெளியில் உடலுறவு சாத்தியமா? வைரலாகும் சர்ச்சை சந்தேகம்!
- IndiaGlitz, [Thursday,December 16 2021]
விண்வெளியில் மனிதர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள முடியுமா? என்பது குறித்து நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் ரகசியத் திட்டம் வகுத்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து இருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பியர் கோஹ்லர் விண்வெளியில் மனிதர்கள் பயன்படுத்திவரும் மைக்ரோ கிராவிட்டி தளங்களில்(ஸ்பேஸ் நிறுவனம்) அவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள முடியுமா? என்பது குறித்து நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் STS-XX எனும் பெயரில் ரகசிய ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிவித்து உள்ளார். இந்தக் கருத்து தற்போது விஞ்ஞானிகளிடையே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
கடந்த 1996 வாக்கில் ஒரு தம்பதிகள் விண்வெளியில் உடலுறவு வைத்துக்கொண்டதாகத் தனது The final Mission:Mir, The Human Adventure எனும் புத்தகத்தில் பியர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளியில் உடலுறவு வைத்துக் கொள்ள முடியுமா என்பதை உறுதிப்படுத்த ISS ஆராய்ச்சி நிறுவனம் எதிர்காலத்தில் ஆய்வுக்குழுவை விண்வெளிக்கு அனுப்பி பரிசோதித்து பார்க்க உள்ளதகாவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் நாசா இதுகுறித்து சமீபத்தில் பன்றிகளை வைத்து உடலுறவு குறித்த பரிசோதனைகளை விண்வெளியில் நடத்தியதாக பியர் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் பியரின் கருத்துகளை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் முற்றிலும் மறுத்திருக்கிறது. ரஷ்ய ஆய்வு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் பியரின் கருத்துகளை நிராகரித்து இருகிறது.
பியரின் இந்தச் சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து, நாசா விண்வெளி நிறுவனம் திருமணம் செய்துகொண்ட விஞ்ஞானிகள் கூட்டாக விண்வெளிக்கு செல்வதற்கே மறுப்பு தெரிவித்து இருப்பதையும் சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நாளுக்கு நாள் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளி சுற்றுலா குறித்து பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் உடலுறவு கொள்ள முடியுமா? மேலும் கேப்யூலில் இருந்து கொண்டு உடலுறவு எப்படி இது சாத்தியமாகும்? என்பது குறித்து ஆய்வு நடைபெறுவதாக பியர் தெரிவித்து இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.