உடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...? காரணம் என்ன...?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த செய்தி சற்று வியப்பைத் தந்தாலும், யுனைடெட் கிங்டனின் இதுபோன்ற தகவல் வெளிவந்துள்ளது. ஒரு இளைஞன் தன் காதலியுடன் உடலுறவு கொள்கையில், அவன் ஆணுறுப்பு உடைந்த சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி சன் என்ற பத்திரிக்கையில் இது பற்றிய செய்திகள் வந்துள்ளது.
உடலுறவு கொள்கையில் ஆண்களுக்கு ஆண்குறி உண்மையில் உடைந்துவிடுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து மருத்துவம் கூறுவது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆண்குறியில் எலும்பு முறிவு ஏற்படுவதையே, ஆணுறுப்பு உடைவது என்று கூறப்படுகிறது.
ஆணுறுப்பு எலும்பு முறிவு.....!
சாதாரணமாக எலும்பு முறிவதில் இருந்து இது வேறுபடுகின்றது. காரணம் ஆணுறுப்பு பகுதியி எலும்பு இல்லாததால், இதை திசு முறிவு என்றும் கூறுகிறார்கள். ஆணுறுப்பின் தோல் பகுதிக்கு கீழே ரப்பர் போன்ற திசுக்கள் அடுக்கு உள்ளதால், இது "துனிகா அல்புகினியா" என்று கூறப்படுகிறது. இதுதான் உடலுறவு சமயத்தில் ஆணின் ஆணுறுப்பு அளவு அதிகரிக்க மற்றும் குறைய காரணமாக அமைகின்றது. சில சமயங்களில் சிறுநீர்க்குழாய் சிதைவடையவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து பிரச்சனைகள் உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
ஆணுறுப்பு எலும்பு முறிவு (திசு முறிவின்) அறிகுறிகள் என்னென்ன....!
ஆணுறுப்பில் சத்தம் ஏற்படும்
விறைப்புத்தன்மை குறைந்துவிடும்
அந்த இடத்தில் கடுமையான வலி இருக்கும்
ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டால், அந்த இடம் அடர் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இருக்கும்.
திடீரென ரத்தப்போக்கு ஏற்படும்
சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் ஏற்படும்.
இதை கண்டறிவது எப்படி...!
சிறுநீர்க்குழாய் செயல்பாடு குறித்து கண்டறிய சிறுநீர் பரிசோதனையும், ஆணுறுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க சிறப்பு வகை எக்ஸ்ரே, ஆண்குறியில் அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ உள்ளிட்ட சோதனைகளை செய்து பார்க்கலாம்.
பின்குறிப்பு : இத்தகவல்கள் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக செய்தி வழியாக கூறப்பட்ட கருத்துக்கள் மட்டுமே, நீங்கள் சொந்த மருத்துவரை அணுகி இப்பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பது நல்லது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments