ஓவியாவின் காதலரா இவர்? வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாவின் முகம்தான் என்ற அளவுக்கு ஓவியா மக்கள் மனதில் அந்த அளவுக்கு இடம் பிடித்திருந்தார். முதல் சீசனை அடுத்து வரும் சீசனில் கூட ஓவியாவை காப்பியடித்து தான் பல போட்டியாளர்கள் நடித்து வருவதாக கூறப்படுவதுண்டு

இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னராகிய ஆரவ்வை ஓவியா காதலித்ததாகவும் அதன் பின்னர் பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்டது என்பதும் ஆரவ்வுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தான் சிங்கிள் என்றும் ஓவியா பதிவு செய்த ஒரு டுவீட்டிற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’லவ்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதனையடுத்து இவர்தான் ஓவியாவின் காதலர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இவர் யார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஓவியாவின் காதலர் என்று கூறப்படும் இவர் யார் என்று உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்