'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் தேதியை ஹேக்கர்கள் அறிவித்தார்களா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவுள்ள 'தமிழ்ப்படம் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சந்தானபாரதி, கலைராணி, மனோபாலா, உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தின் டுவிட்டர் பக்கத்தில் 'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் தேதி 25.05.2018 அன்றும், அதே படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் 26.05.2018 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் சித்தார்த், தன்னுடைய டுவிட்டர் பக்கம் கடந்த சில நிமிடங்களாக ஹேக்கர்களின் பிடியில் இருந்ததாகவும், இது அவர்கள் செய்த  வேலை என்றும் டுவீட் செய்துள்ளார்.

உண்மையில் இது ஹேக்கர்களின் கைவரிசையா அல்லது பட விளம்பரத்திற்காக படக்குழுவினர்களே செய்யும் தந்திரமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்