காயத்ரி ரகுராம் கர்ப்பமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவில் முக்கிய பொருப்பில் உள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. மேலும் அவர் பதிவு செய்துள்ள இமோஜியும் கர்ப்பத்தை உறுதி செய்வது போல் உள்ளது.
ஆனால் காயத்ரி ரகுராம் நடிக்கும் சீரியல் அல்லது திரைப்படத்தின் கெட்டப் இது என்றும் ஒருசிலர் கமெண்ட் பகுதியில் கூறியுள்ளனர். உண்மையில் காயத்ரி கர்ப்பமா? அல்லது அவர் நடிக்கும் கேரக்டரின் தோற்றமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout