கட்டுக்கட்டாக பணம்.. வேலூரில் தேர்தல் ரத்தாகிறதா?

இன்று நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் சாக்கு முட்டைகளில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. ஒவ்வொரு வார்டு பெயர் எழுதி பண்டல் பண்டலாக பணம் இருந்ததால் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கவே பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து கூறிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும், பணம் பறிமுதல் குறித்து வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கையை தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும் என்றும், தேர்தல் ரத்து குறித்து தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

பணப்பட்டுவாடா செய்வதாக ஏற்பட்ட புகார் காரணமாக ஏற்கனவே ஆர்கே நகர் உள்ளிட்ட ஒருசில தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் வேலூர் தொகுதிக்கும் அப்படி ஒரு நிலைமை வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'சூப்பர் டீலக்ஸ்' பாணியில் சிஎஸ்கே வெற்றியை டுவீட் செய்த ஹர்பஜன்சிங்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தல தோனியின் அதிரடியான 75 ரன்களும்,

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் துணிச்சலாக இந்த விவகாரம் குறித்து புகார் கூறியது ஒரே ஒரு பெண் மட்டுமே.

வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக துரைமுருகன் மகன் சென்னை ஐகோர்ட்டில் மனு

வேலூர் மக்களவை தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பிரபுதேவா இயக்கும் அடுத்த படம் இன்று ஆரம்பம்! ஹீரோ யார்?

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் இந்திய திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபுதேவா.

ஆர்.கே.நகரில் மட்டும் ஏப்ரல் 12ல் தேர்தல்!

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.