கட்டுக்கட்டாக பணம்.. வேலூரில் தேர்தல் ரத்தாகிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் சாக்கு முட்டைகளில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. ஒவ்வொரு வார்டு பெயர் எழுதி பண்டல் பண்டலாக பணம் இருந்ததால் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கவே பதுக்கி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து கூறிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும், பணம் பறிமுதல் குறித்து வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கையை தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும் என்றும், தேர்தல் ரத்து குறித்து தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
பணப்பட்டுவாடா செய்வதாக ஏற்பட்ட புகார் காரணமாக ஏற்கனவே ஆர்கே நகர் உள்ளிட்ட ஒருசில தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் வேலூர் தொகுதிக்கும் அப்படி ஒரு நிலைமை வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout