நீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்?
- IndiaGlitz, [Friday,August 07 2020]
சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே. இந்து மத மக்களின் நூற்றுக்கணக்கான ஆண்டின் கனவு நிறைவேறுவதால் இந்த கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருசிலர், அதே தினத்தில் ராவணன் குறித்த பெருமைகளை டுவிட்டரில் பதிவு செய்தனர். ராவணன் சிறந்த சிவபக்தன் என்றும் தமிழ் தேசத்தின் பெருமைக்குரியவர் என்றும் ராவணனை கொண்டாடி வந்தனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பழைய வண்ணாரப்பேட்டை’ ’திரௌபதி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூக்கிட்டு போறவனை கொண்டாடுறதும், அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற வேற லெவல்.. கலக்குங்க ப்ரோ.. என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மணிரத்தினம் இயக்கிய இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஸ்டில் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
ராவணனை போற்றுபவர்களையும் இராமரை தூற்றுபவர்களையும் கண்டிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, மணிரத்தினம் இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஸ்டில்லை குறிப்பிட்டு, அதில் ‘வகையறா’ என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையையும் பதிவு செய்த இயக்குனர் மோகனுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய திரையுலகமே மணிரத்னம் அவர்களை மரியாதைக்குரிய இடத்தில் வைத்து பார்க்கும்போது தமிழ் இயக்குனர் ஒருவரே அவரை கிண்டல் செய்யலாமா? என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.
அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூக்கிட்டு போறவனை கொண்டாடுறதும், அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற வேற லெவல்.. கலக்குங்க ப்ரோ.. pic.twitter.com/R1Rz4nw8q9
— Mohan G Krish ???? (@mohandreamer) August 7, 2020